கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வயல் நிலமொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணமொன்றை பயன்படுத்தி, குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சம்பவத்தில் மெனிக்ஹின்ன – கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.