இந்த ஆண்டு (2023) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இரு நாடுகளில் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த ஹைபிரிட் பிரேரணைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்புதலைப் பெற உள்ளதாக Espncricinfo இணையதளம் தெரிவித்துள்ளது.
போட்டித் தொடரின் 13 போட்டிகளில் 4 அல்லது 5 போட்டிகள் பாகிஸ்தானில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்பட உள்ளது.
இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், இலங்கையிலும் போட்டி நடைபெறும் என்றும், இந்த வார இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்றும் espncricinfo இணையதளம் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் 1 முதல் 17 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.