தனது மகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது மகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு! #இலங்கை


தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.


மேலும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபரான தந்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.


சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.