மனைவியை உடலுறவுக்காக சித்திரவதை செய்தார் எனக் கூறப்படும் 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்.
அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற 54 வயதுடைய பெண் ஒருவர் தனது 67 வயது கணவருக்கு எதிராக இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு 14 வயதாக இருக்கும்போது விருப்பமில்லாமல் தனது கணவரை திருமணம் செய்ததாகவும் திருமணமாகி 40 வருடங்களாவதாகவும் அவர் கூறியுள்ளர்.
தனக்கும் தனது கணவருக்கும் மூன்று மகன்கள் இருப்பதாகவும், மூத்த மகனுக்கு இப்போது 40 வயது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை தனது கணவர் உடலுறவுக்காக சித்திரவதை செய்வதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சர்மிந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.