ஒரு பெண் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
குறித்த பெண் 76 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவரது மகன் அவரது இறுதிச் சடங்குகளை தயார் செய்து, அவர் அடக்கம் செய்வதற்கு முன்பு தனது ஆடைகளை மாற்றத் தயாராகிக்கொண்டிருந்தபோது, குறித்த பெண்ணுக்கு ஆழ்ந்த மூச்சுவிடும் சத்தம் கேட்டது.
அதன்படி உறவினர்கள் நடத்திய சோதனையில் குறித்த பெண் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது அந்த பெண் ஏற்கனவே சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)