சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் சமீபத்திய சிவப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் 'தேடப்படுபவர்கள்' என பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று இலங்கையர்கள் பிற நாடுகளில் செய்த குற்றங்கள் தொடர்பாக அந்நாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு அறிவிப்பில் தேடப்படுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.