சதொச நிறுவனம் தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
இதேவேளை, நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாகும்.
அத்துடன் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 137 ரூபாவாகும்.