இலங்கை மின்சார சபை நாட்டின் மூன்று பகுதிகளில் தனது இ-பில் முறையை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ட்விட்டரில் காணொளிச் செய்தியைப் பகிர்ந்துள்ள CEB, தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளுக்கு எதிர்வரும் ஜூலை 01, 2023 முதல் இ-பில்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, தமது கட்டண விபரத்தை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாகப் பெறுவதற்கு பதிவு செய்யுமாறு பிரதேசவாசிகளை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மின்கட்டணத்தை SMS மூலம் பெற விரும்புவோர் REG <space> தமது கணக்கு இலக்கத்தை டைப் செய்து 1987 என்ற எண்ணுக்கு SMS அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (ie. REG<space>12345678 and send it to 1987)
மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ebill.ceb.lk இல் உள்நுழைந்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)
— Ceylon Electricity Board - CEB (@CEB_lk) June 19, 2023