சிகிச்சைக்காக வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தததாக கூறப்படும் வைத்தியரை கைது செய்ய சிறுவர் மற்றும் மகளிர் பணியக தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கம்பஹா - சியாம்பலாப்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்திய நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 42 வயதான பெண்ணொருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.