கேரளாவில் இருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு உள்ள ஹஜ் புனித யாத்திரைக்கு நடந்தே சென்ற ஷிஹாப் சோத்தூர் என்ற இளைஞர் 8,650 கி.மீ. தூரத்தை, சுமார் 382 நாட்கள் நடந்து வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் 02ம் திகதி பயணத்தை தொடங்கிய இவர், பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாக சென்று மக்காவை அடைந்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் 02 ஆம் திகதி மக்காவை நோக்கி நடை பயணத்தை துவங்கினார். பாகிஸ்தான் வழியாகத் ஈரான் சென்று, ஈராக், குவைத், சவூதி அரேபியா வழியாக மக்காவை அடைந்துள்ளார். 382 நாட்களாக 8,650 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்காவை அடைந்தார்.
சவூதி அரேபியாவுக்குள் நுழைந்தவுடன் ஷிஹாப் முதலில் மதினாவுக்குச் சென்றார். அங்கே 21 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிகக் கடமைகளை முடித்துக் கொண்டு அவர் மக்கா புறப்பட்டார். மதினாவில் இருந்து மக்காவுக்கும் நடந்தே சென்றமை குறிப்பிடத்தக்கது.
மலப்புரம் டூ மெக்கா (Malappuram to Mekkah) தனது முழு பயணத்தின் போது, யூடியூப் மூலம் தனது பார்வையாளர்களுக்கு வீடியோ வெளியிட்டு தெரியப்படுத்தி வந்துள்ளார். (யாழ் நியூஸ்)