டொலருக்கு நிகரான இன்றைய ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலருக்கு நிகரான இன்றைய ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் வெளியீடு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.


இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (19) மீண்டும்  உயர்வடைந்துள்ளது.


இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இலங்கை வர்த்தக வங்கிகளின் தரவுகளின் படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.


மக்கள் வங்கியில் - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவில் இருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 319.54 ரூபாவில் இருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.


கொமர்ஷல் வங்கி - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவில் இருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 320 ரூபாவில் இருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.


சம்பத் வங்கி - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 301 ரூபாவில் இருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் விற்பனை பெறுமதியானது 318 ரூபாவில் இருந்து 314 ரூபாவாக குறைவடைந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.