அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர், மற்றுமொரு வைத்தியரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மருத்துவர், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மருத்துவமனையின் கிளை அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை தனது அலுவலகத்திற்கு வருகை தந்த, வைத்தியர் ஒருவர் தன்னை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விடயம் தொடர்பாக இரண்டு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.