இவ்வார இறுதி முதல் எரிபொருள் விநியோகத்தில் வரவிருக்கும் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வார இறுதி முதல் எரிபொருள் விநியோகத்தில் வரவிருக்கும் திருத்தம்!

இவ்வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தந்து ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். 


மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும் வகையில் கடந்த 4 மாதங்களாக ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் CPC மற்றும் CPSTL இயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.


அண்மைய விலை திருத்தத்தின் போது விலை குறைப்பு எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களால் ஆர்டர்கள் வழங்கப்படாமையால் தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.


"எரிபொருள் நிலையங்களில் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தத்திற்குப் பிறகு நுகர்வோரின் தேவை உடனடியாக அதிகரித்தது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு பங்களித்தன" என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.