களுத்துறை பயாகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான லொறியை திருடி வாகனத்தை பிரித்ததில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அண்மையில் நான்கு பேர் லொறியின் உரிமையாளரைத் தாக்கி பணத்தையும் லொறியையும் திருடிச் சென்றதாக பயாகல பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை அடுத்து, பாதுக்க பிரதேசத்தில் வெற்று நிலத்தில் வாகனம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)