எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (03) மாலை 23 வயதுடைய இளைஞரொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி “தன்சல்” ஒன்றிற்கு அருகில் உயிரிழந்துள்ளார்.
இறந்த நபரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த சூப் 'தன்சல்' அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இறந்த நபரின் பணப்பையில் இருந்த பணம் காணாமல் போனது தொடர்பாக இறந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.