ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று நாட்களில் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றை கடந் 15ஆம் திகதி அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது.
இதனடிப்படையில், தற்போது 51 பிரதேச செயலக அலுவலகங்களில் அதற்குரிய தொழிநுட்ப கோளாறுகள் இருப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டடுள்ளன.
மேலும், குறித்த கடவுச்சீட்டு விநியோகமானது பல முறை பரீட்சித்த பின்னரே அமுலுக்கு வந்தமையும் சுட்டிக்காட்டதக்கது.
இதனடிப்படையில், குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பான அமைச்சரிடம் இது தொடர்பில் தெரிவித்தபோது, குளறுபடிகள் இடம்பெற வாய்ப்பில்லை என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் , இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஒன்லைன் கடவுச்சீட்டு விநியோக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சுமார் 9000 கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவற்றுக்கான கைரேகை பதிவுகள் தெரிவு செய்யப்பட்ட 51 பிரதேச செயலக அலுவலகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.