ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதால் அந்த அதிகாரியை பொலிஸ் மா அதிபர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
எனவே, 2023, ஜூன் 14, முதல் அவரை சேவையில் இருந்து இடைநீக்கம் செய்து பொலிஸ் தலைமையகம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.