பல்லேகெலே, தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் உறவினர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மாணவர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சிறுவன் நேற்று முன்தினம் (24) உயிரிழந்தான்.
மற்றைய சிறுவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.
அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு மாணர்வர்களே இவ்வாறு உயிர் பலியாகினர்.