கொழும்பு - அவிசாவலை வீதியில் மாகும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஹோமாகம விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் கடமைநேர அதிகாரியாக பணியாற்றிய பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றைய தினம் (28) அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த அவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.