இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் (14) சரிந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 303.19 ஆகவும் விற்பனை விலை ரூ. 318.99 ஆகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் நேற்றைய கொள்வனவு விலை ரூ. 294.00 மற்றும் விற்பனை விலை ரூ. 309.00 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.