இலங்கையில் கொவிட் தொற்று உச்ச கட்டத்திலிருந்த வேளையில் ஒவ்வொரு முஸ்லிம் நபர் உயிரிழக்கும் போதும் அது தனக்கு நித்திரையற்ற இரவாகவே இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது மேற்கு ஆசிய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கூறினார். அப்போது சேவையாற்றிய ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில், தனது வாழ்க்கையில் மிக மோசமான நிலையை உணர்ந்ததாக அவர் கூறினார்.
உலக சுகாதார ஸ்தாபனங்கள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்யலாம் என அமைச்சரவையும் தெரிவித்த போதும், நிபுணர்கள் குழு என்று அழைக்கப்படுபவர்கள் சிலர் அந்த முடிவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.