ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அணி கேப்டன் தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலகலமாக நடைபெற்ற இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்ப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளில் தோனி ஓய்வு பெறுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தோனி கூறியுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஐபிஎல் தொடர் நடைபெற்றபோதும் கூட முழங்கால் காயம் காரணமாக தோனி விளையாடுவரா இல்லை என சந்தேகம் எழுந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஈடுபட்ட பயிற்சியின்போது இடது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தோனி அவதிப்பட்டதாகவும், அதனால் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் லீக் சுற்றுக்கு முன்னதான வலைப் பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
காயத்திலும் முதல் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை தோனி இந்த சீசன் முழுவதுமே பங்கேற்றார். எனினும், இருந்தாலும் காயம் காரணமாக சிலப் போட்டிகளில் தோனி இயல்பாக ஓட முடியாமல் அவதிப்பட்டதை காண முடிந்தது.
பேட்டிங்கில் கடைசி ஓவரில் இறங்கினாலும் தோனி 2 சிக்ஸராவது அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பின்னர் போட்டி முடிந்த பின்னர் தன்னை அதிகம் ஓடவைக்க வேண்டாம் என எங்கள் அணி வீரர்களிடம் கூறியுள்ளதாகவும் கூட தோனி தெரிவித்து இருந்தார்.
பின்னர் சென்னையில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்க்க முழங்கால் கேப்புடன் வலம் வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
மேலும் இதுதொடர்பாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளம்மிங், தோனி தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது சில அசைவுகளில் அதனை நீங்கள் காணலாம் என்றும், அந்தக் காயம் அவருக்கு சற்று தடையாகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரை வென்ற கையோடு, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான சில பரிசோதனைகளுக்காக இந்த வாரத்தில் தோனி அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரிசோதனையின் முடிவில் அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சையையும் அங்கேயே உடனடியாக தோனி மேற்கொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு சீசன் முழுவதும், கேப்டன் தோனி மூட்டு வலியுடன் விளையாடியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்னதாக, தோனி தனது முழங்காலில் பட்டை ஒன்றை கட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தோனியின் காயம் குறித்து பேசிய சென்னை அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, தேவைப்பட்டால் அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொள்வார் என்றார். எனினும் இது முற்றிலும் அவரின் தனிப்பட்டவிருப்பம் என்றும் கூறினார்.