குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், பொதுமக்களின் தகவலுக்கமைய காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள குழந்தை மற்றும் குழந்தையின் தாய் ஆகியோர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.