மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியான 'மனிதருள் மாணிக்கம்' என போற்றப்படும் அமரர். அப்துல் அசீஸ் அவர்களின் மகனான அஷ்ரப் அஸீஸ் இன்று (16) அதிகாலை காலமானார் .
அஷ்ரப் அஸீசும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தவர். அசீஸ் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாக அரசியல், தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர்.
உடல்நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. கொழும்பு, பம்பலப்பிட்டியவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானார்.
அவரின் ஜனாசா கொழும்பு, தெமட்டகொடை, குப்பியாவத்த முஸ்லிம் மையவாடியில் இன்று முற்பகல் 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.