தான் ஈன்றெடுத்த குட்டியைக் கொன்ற ஆடவரைத் தாய் ஒட்டகமே கடித்துக் கொன்ற சம்பவம் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நிகழ்ந்துள்ளது.
அந்த ஆடவர், ஒட்டகக் குட்டியைக் கொன்று, அதன் தலையைப் பிடித்திருந்தார். அதனைக் கண்டதும் தாய் ஒட்டகம் வெறியடைந்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த ஆடவரை அந்த ஒட்டகம் கடுமையாகத் தாக்கியது. ஒட்டகம் கடித்ததால் ஆழமான காயம் ஏற்பட்டு, அவரது உடலிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டியது. இறுதியில், 70களில் இருந்த அந்த முதியவர் இறந்துபோனார்.
இந்தப் புவியில், வஞ்சம் தீர்க்காது விடாத விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று என்பது அரபு இனத்தவர் உள்ளிட்ட பல இனத்தவரின் நம்பிக்கை.
எத்தனை ஆண்டுகளானாலும் ஒட்டகம் தன் ஆத்திரத்தை மனத்திற்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் என்றும் பழிதீர்க்க சரியான நேரத்திற்காக அது காத்திருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். (யாழ் நியூஸ்)