பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரொம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (02) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெரொம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.