கொரோனா பரவல் பற்றிய உண்மையை உடைத்த வுஹான் ஆராய்ச்சியாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவல் பற்றிய உண்மையை உடைத்த வுஹான் ஆராய்ச்சியாளர்!


சீனா, வேண்டுமென்றே கொரோனாவை மக்களின் மீது ஆயுதமாக பயன்படுத்தியதாக ஆட்சியாளர் ஒருவர் தந்து பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.


ஒரு நேர்காணலில் சீனாவின் கொரோனா வைரஸ் பரவப்பட்டதாகக் கூறப்படும் வுஹானைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ, கூறும்போது கொரோனா வைரஸ் குறித்த திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். சாவோ ஷாவோ, வுஹானின் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங்கிற்கு அளித்த நேர்காணலில் சாவோ ஷாவோ கூறும்போது, மக்களை பரிசோதிப்பதற்காக சீனா இந்த கொரோனவை ஒரு பையோ (Bio Weapon) ஆயுதமாக பயன்படுத்தியது எனக் கூறினார். எந்த வைரஸ் சிறப்பாக மக்களிடையே பரவுகிறது என்பதை சோதிப்பதற்காக தனக்கும் தன்னுடன் பணிபுரியும் மற்ற நான்கு பேருக்கும் சில வைரஸ் மாதிரிகள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


மேலும் சாவோ ஷாவோவுடன் பணிபுரியும் மற்றொரு ஆராய்ச்சியாளரான ஷான் சாவோவிடம் எந்த வைரஸ் அதிகமாக பாதிக்கும் திறனுடையது என பரிசோதிக்கும்படியும், மற்ற உயிரினங்களில் இதனை எப்படி எளிதாக பரவ வைப்பது என அவரது மேலதிகாரி கேட்டதாகவும் சாவோ ஷாவோ கூறினார்.


2019 ஆம் ஆண்டு வுஹானில் நடந்த இராணுவ உலக விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த சர்வதேச ஹோட்டலுக்கு சில ஆராய்ச்சியாளர்களை வைரஸை பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சாவோ ஷாவோ தெரிவித்தார்.


மேலும் ஏப்ரல் 2020 இல் சின்ஜியாங்கில் உய்குர்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதாகக் கூறி அங்கு வைரஸை பரப்புவதற்கும், வைரஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கண்காணிக்கவும் வைராலஜிஸ்ட் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறுதியாக தெரிவித்த சாவோ ஷாவோ, நான் கூறியது எல்லாம் ஒரு சிறிய பகுதி தான் என்றும் தொற்றுநோயின் உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் ஆய்வில் உள்ளதாகக் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.