நாட்டில் தங்கத்தின் விலையானது பாரிய மாற்றங்களின்றி காணப்படுவதாக தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் தங்கத்தின் விலையில் சிறிதளவிலான அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் (28) 22 கரட் தங்கம் ஒரு பவுண் 146,000 முதல் 148,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தங்க வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாய் முதல் 169,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.