2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிண்ணம் ஒரு பலூனுடன் இணைக்கப்பட்டு பூமியில் இருந்து 12,000 அடி உயரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் இந்த கிண்ணம் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் தரையிறக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் கிண்ணம் என்ற பெருமையையும் இந்த கிண்ணம் பெற்றுள்ளது.