அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி திட்டம் தொடர்பில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய அடுத்த வாரம் விசாரணைக் குழு நியமிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர்களின் மேற்பார்வையில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
எவ்வாறாயினும், அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அஸ்வெசும திட்டம் தொடர்பாக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 700 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டில் 200 மில்லியன் டொலர் அடுத்த மூன்று நாட்களில் நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.
அந்தத் தொகையை சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குப் பயன்படுத்த இணங்கப்பட்டுள்ள நிலையில், அதனை அஸ்வெசும திட்டப் பணிகளுக்குப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.