தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நீடித்துள்ளது.
மேலும் மார்ச் 03, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தற்காலிக ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அச்சடிப்பு அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் பெருமளவில் தேங்கியுள்ளதை நிவர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)