பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி - 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் தற்போது அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
புஷ்பராஜ் விக்னேஷ்வரன் என்ற 27 வயதுடைய, 131/47/47, ஜம்பட்டாவீதி, கொழும்பு 13ஐ வசிப்பிடமாக கொண்ட, மீன் வியாபாரி என்பவரே தேடப்படுபவராவார்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்,
பணிப்பாளர் குற்றப்பிரிவு: 0718591733
எல்லை குற்றப்பிரிவு: 0718591735
விசாரணை பிரிவு 1: 0718596503, எனும் இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.