கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஒட்சிசன் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தின் சவுத்தம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரை நோக்கி 1912ம் ஆண்டு ஆர்.எம்.எஸ். டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது.
அதில் 2 ஆயிரத்து 224 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் வடக்கு அத்திலாந்திக் கடலில் பயணித்தபோது, இராட்சத பனிப்பாறையில் மோதி அந்த கப்பல் பிளவடைந்து கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் கடலில் மூழ்கி ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பலின் சிதைவுகள் 1985 இல் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல்போயுள்ள நிலையில், அந்தக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.