லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் இவ்வாறு விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 2.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.