அடுத்த பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை பொருத்தமான பெயர் முன்மொழியப்படவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.
இதன்படி ஜனாதிபதி அவருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்க வேண்டும் அல்லது புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
இதேவேளை, தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு மேலும் பதவி நீடிப்பு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.