இந்த ஆண்டு உலக நாணய தரவரிசையில் முதலிடம் பெற்ற பின்னர், அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது போன்ற காரணங்களால் இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அதன்படி, டொலருக்கு 1.4% உயர்ந்து 289.91 ஆக இருந்த ரூபாய், டிசம்பர் இறுதிக்குள் 350 ஆக குறையும் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பிஎல்சி மற்றும் பிஎம்ஐ தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)