உயா்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துளளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர வகுப்புகளில் வசூலிக்கப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில் கூறப்படும் விடயங்கள் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இவ்வருட உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.