SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
எனினும், நடாஷா எதிரிசூரியவை ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், SL-Vlog இன் உரிமையாளர் புருனோ திவாகராவும், நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.