நேற்றைய தினம் (01) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் உயர்வுடன் காணப்பட்ட ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை இன்று ரூ. 283.87 இருந்து ரூ. 287.42 ஆகவும், விற்பனை விலை ரூ. 297.23 இருந்து ரூ. 300.32 ஆகவும் பதிவாகியது.
இந்நிலையில், வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பும், பல வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராகவும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. (யாழ் நியூஸ்)