டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 05 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1,600 அடி பிரதேசத்தில் கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு 'பேரழிவு வெடிப்பு' இடம்பெற்றதை உறுதிச்செய்வதாக அமெரிக்க கரையோர காவல்படையின் அதிகாரி ஒருவர் செய்தி மாநாடு ஒன்றில் கூறியுள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை 'ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை' கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலின் சிதைவை ஆராய புறப்பட்ட நிலையில் காணாமல் போனது.