கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தனிநபர் ஒருவரிடம் வீடு தருவதாக உறுதியளித்து, 7 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.