பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து சுமார் 650 மில்லியன் ரூபா பெறுமதியான 16 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றை பரிசோதித்த போது குளிரூட்டும் அறைகளில் இருந்து 16.193 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் உள்ள சுங்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, சந்தேகநபர்கள் கடத்தல் பொருட்களுடன் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)