60 வகை மருந்துகளின் விலை குறைகிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

60 வகை மருந்துகளின் விலை குறைகிறது!


60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளது.


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.