எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 மருந்துகளுக்குரிய அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.