இன்று (27) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, வரவு செலவுத் திட்ட உதவிக்காக 500 மில்லியன் டொலர்களுக்கு உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கைக்கான மிகப்பெரிய நிதிப் தவணை இதுவாகும்.
22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை, ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றது மற்றும் அதன் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.8% என்ற சாதனைச் சுருக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு வளர்ச்சிக்கு திரும்புவதற்கு முன்னர் இந்த ஆண்டு 2% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 28ஆம் திகதி நடைபெறும் உலக வங்கியின் வாரியக் கூட்டத்தில் வரவுசெலவு மற்றும் நலன்புரி ஆதரவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, $700 மில்லியன் வரவுசெலவு மற்றும் நலன்புரி ஆதரவில் இருந்து $200 மில்லியன் நலன்புரி திட்டங்களுக்கு வழங்கப்படும்.
கடன் வழங்குநரிடமிருந்து இரண்டு தவணைகளில் நிதி வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)