மீகொட, கொடகமவில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் சுமார் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான கைக்கடிகாரம் என்பனவற்றுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் இருந்து 20.3 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு பெரிதும் அடிமையானவர் எனவும் வீடுகளை உடைத்து திருடுவதை வழக்கமாகக் கொண்டவர் எனவும் கூறப்படும் சந்தேக நபர் மெகொட ஹெட்டியவத்த பிரதேசத்தில் வசிக்கும் ‘சார்ட்டர் சூட்டி’ என அறியப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மாணிக்கத்தை விற்பனை செய்ய சம்மதித்தவர் மற்றும் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் மாணிக்கத்தின் வடிவத்தை மாற்ற இணங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)