கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 35 வயது வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் பணியில் இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)