நேற்றிரவு (01) கெக்கிராவ, செக்குபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் 35 வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்ப்பட்டவர் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது கணவரினால் வீட்டின் அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்ததாகவும், ஆனால் நேற்றிரவு தனி அறையில் உறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்று அதிகாலை அப்பெண் அறைக்குள் இறந்து கிடப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.
மரணத்திற்கான காரணம் அல்லது தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை, கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)