துபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடனான கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவை வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவற்றில் அழகுசாதனப் பொருட்கள், மது பானம், சிகரெட்டுகள் மற்றும் 03 வாகன பாகங்கள் உள்ளிட்டவை இருந்ததாக இலங்கை சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.