எம்பிலிபிட்டிய, பனாமுர, வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தநபர் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.